புதியவை

சிம்ஸ் கேம்பஸ் சான்றிதழ் வழங்கும் விழா : அமைச்சர் ரிசாத் அடங்கிய குழு அதிதிகளாய் - நூர்


சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் 13வது சான்றிதல் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2015.செப்டம்பர் 13ம்  திகதி (நாளை மறுதினம்) காலை 8.30 மணியளவில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சிம்ஸ் கேம்பஸ்  பணிப்பாளர் நாயகமும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளருமான மென்பொருள்  பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற உள்ளது.

இச்சான்றிதலானது சாய்ந்தமருது பிரதேச சிம்ஸ் கேம்பஸ் கிளையில் மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில் திட்டத்தின் கீழே புலமைப்பரிசில் பெற்று கல்வி பயின்ற 200 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் வர்த்தக,கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமான அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளார்.இந்நிகழ்வில் ,கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும்,கட்சியின் தவிசாளருமான MSS.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ஹாஜி,முகம்மத் நவவி,கிழக்குமாகாண சபை உறுப்பினர் AM. ஜமீல்,மற்றும் பல அரசியல் பிரமுகர்களும்  சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர்,

இந்நிகழ்வில் கல்வியலாளர்கள்,விரிவுரையாளர்கள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.இந்நிகழ்வில் சிறந்த சேவையினை வழங்கிவரும் விரிவுரையாளர்களும்,சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிட தக்க அம்சமாகும்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.