புதியவை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தவுள்ளதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தவுள்ளதாக அறிவிப்பு



இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இன்று காலை விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இதன்போது, சிதத் வெத்தமுனி நாடு திரும்பியதும் கிரிக்கெட் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இலங்கை கிரிக்கெட் நிறவனம் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.