வாழ்வின் பயணம் நெடிதாமே
தாழ்வின் நிலைதான் ஏனடைந்தாய்
பாழும் வறுமை சூழ்ந்ததுவோ
வாழ்வை நீயும் ஏன்மறந்தாய்
தாழ்வின் நிலைதான் ஏனடைந்தாய்
பாழும் வறுமை சூழ்ந்ததுவோ
வாழ்வை நீயும் ஏன்மறந்தாய்
பிள்ளைச் செல்வம் பெற்றாயோ
கள்ளம் இன்றி வளர்த்தாயோ
பள்ளிப் படிப்பும் அளித்தாயோ
பள்ளம் உயர உழைத்தாயோ
கள்ளம் இன்றி வளர்த்தாயோ
பள்ளிப் படிப்பும் அளித்தாயோ
பள்ளம் உயர உழைத்தாயோ
அல்லும் பகலும் காத்தாயோ
செல்வம் எனவே வளர்த்தாயோ
அல்லல் தவிர்க்க வைத்தாயோ
எல்லா சுகமும் மறந்தாயோ
செல்வம் எனவே வளர்த்தாயோ
அல்லல் தவிர்க்க வைத்தாயோ
எல்லா சுகமும் மறந்தாயோ
அன்று சுமந்த பிள்ளைதான்
இன்று சுமையாய் எண்ணியதோ
அன்பு வைத்துக் காத்திடவே
பண்பு மறந்து நடக்கிறதோ
இன்று சுமையாய் எண்ணியதோ
அன்பு வைத்துக் காத்திடவே
பண்பு மறந்து நடக்கிறதோ
தொல்லை என்று நினைத்தேதான்
பிள்ளை தெருவில் விட்டானோ
இல்லை தேவை உனதென்றே
சொல்லி மனதைத் துளைத்தானோ
பிள்ளை தெருவில் விட்டானோ
இல்லை தேவை உனதென்றே
சொல்லி மனதைத் துளைத்தானோ
வேகும் நெஞ்சை புதைத்தேதான்
போகும் வழியும் தெரியாமல்
நோகும் காலும் தன்போக்கில்
ஏகும் பாதை நடந்தாயோ!
போகும் வழியும் தெரியாமல்
நோகும் காலும் தன்போக்கில்
ஏகும் பாதை நடந்தாயோ!
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.