புதியவை

பொலன்னறுவை மாவட்டத்தின் மண் அகழ்வை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி

பொலன்னறுவை மாவட்டத்தின் மண் அகழ்வை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதிசூழல் பாதுகாப்பின் போது அரசியல்வாதிகள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஓசோன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
மொரட்டுவை, இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓவியக்கண்காட்சியொன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் முதலாவது குளிரூட்டி சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கண்காணித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்ததாவது;
ஓசோன் படலத்தைப் பாதிக்கும் 97 இரசாயனங்களுள் 55 இரசாயனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்தால் முடிந்துள்ளது. அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய, சூழல் பாதுகாப்பு தொடர்பில் அரசியல்வாதிகளுக்குள்ள பொறுப்புக்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. சரணாலயப் பகுதிகள், கடற்கரையோரங்களை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவ்வளவு அழிவுக்குள்ளாக்குகின்றனர்?…. இதனுடன் தொடர்புடைய அமைச்சுக்கள் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், பொலன்னறுவை மாவட்டத்தின் மண் அகழ்வை முற்றாகத் தடை செய்வதையே முதல் வாரத்தில் முதலாவது நடவடிக்கையாக நான் முன்னெடுப்பேன். கம்பஹா மாவட்டத்தின் மண் அகழ்வுக்கான அனுமதியை முற்றாகத் தடை செய்யுமாறு புவியியல் மற்றும் அகழ்வுப் பணியகத்துக்கு நேற்று முன்தினம் நான் உத்தரவிட்டேன்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.