
காலி வீதி - கோஸ்கம - கலகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று பஸ்சுடன் மோதியதில் இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் இரு பிள்ளைகளுமே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பிள்ளை களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றைய இரு ஆண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.