புதியவை

ஹிக்கடுவையில் இடம்பெற்ற விபத்தில் தாய்,மகன் உயிரிழப்பு

ஹிக்கடுவையில் இடம்பெற்ற விபத்தில் தாய்,மகன் உயிரிழப்பு



காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்றும்,முச்சக்கர வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மேலும் இரண்டு பெண்களும் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.
விபத்தின் பின்னர் வேனின் சாரதி தலைமறைவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுன்றது.
வேனின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் 9 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.