
நாட்டில் விளையாட்டுத்துறை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்னேவ மாகாவலி விளையாட்டரங்கில் நேற்று மாலை இடம்பெற்ற 27 ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்து கொணட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய விளையாட்டுத்துறையை துரிதமாக அபிவிருத்தி செய்து, நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டுமாதங்களுக்குள் நாட்டில் காணப்பட்ட அரசியல் அனுபவம் எந்த நாட்டிலும் இதுவரை கிடைக்கப்பெறாத விசேட அனுபவமாக உள்ளதாகவும் ஐனாதிபதி தெரிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம், பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல செற்பாடுகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு தேவையான சேவையை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கொள்கைக்கு அமைய விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிஹேன குறிப்பிட்டுள்ளார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.