புதியவை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நரேந்திர மோடிக்கு இடையில் இன்று இருதரப்பு ​பேச்சுவார்த்தை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நரேந்திர மோடிக்கு இடையில் இன்று இருதரப்பு ​பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (15) அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நேற்று (14) பிற்பகல் தலைநகர் புதுடில்லியை சென்றடைந்தார்.
சார்க் வலய நாடுகளுக்கு இடையிலான செய்மதிப் பரிமாற்றத் திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் புனரமைப்புத் திட்டம், சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவிகளை பெறுவது மற்றும் இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள அவசர சிகிச்சை சேவைகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு 4 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பிரதமருடன் இந்தியா சென்றுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இன்று (15) புதுடில்லிக்கு செல்லவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரை பிரதமர் இன்று (15) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக புதுடில்லியில் இருக்கும் எமது அலுவலக செய்தியாளர் ஷமீர் ரசூல் டீன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு செயலாளருக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பு தொடர்பிலான தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் எமது அலுவலக செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.