புதியவை

கடவுச் சீட்டுக்கான புகைப்படங்களை பதிவு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் மாத்திரமே பெறமுடியும். -ஊடகவியாளர் -முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்


கடந்த 10-08-2015 குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் சர்வதேச தரத்தில்
பாஸ்போர்ட்டுகளை வழங்குமுகமாக சில மாற்றங்கள் செய்து நேர்த்தியான துல்லியமான சர்வதேச தரத்திற்குரிய புகைப்படங்களை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினுடாக ஒன்லைனே (On line) மூலமாக பெற்றுக்கொள்ளப்படுகின்றது

கிழக்குப் பகுதியில் அண்மைக் காலமாக அம்பாறையிலுள்ள கீர்த்தி ஸ்ருடியோ நிறுவனத்தினர் மாத்திரமே உத்தியோகபூர்வமான புகைப்படப்பிடிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இன்று அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது நிந்தவூர் மாந்தோட்ட சந்திக்கு அருகாமையில் 3ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள "றோஸ் றீனா" புகைப்பட நிலையம் குடிவரவு திணைக்களத்தினால் ( Passport Office ) பதிவு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட புகைப்பட நிலையமாக அங்கீகாரம் பெற்ற புகைப்பட நிலையமாக நியமிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த ஸ்ரூடியோவுக்குச் சென்று படத்தை எடுத்தவுடன்
அவர்கள் படத்தை எடுத்தமைக்கான பற்றுச்சீட்டொன்றை மட்டும் விநியோகிப்பார்கள். அவற்றை பாஸ்போட் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்துடன் இணைத்து பாஸ்போட் காரியாலயத்தில் சமர்ப்பித்தவுடன் கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். On line முறையில் இப்படங்கள் பரிமாறப்படுகிறது.

ஆகையால் நிந்தவூர் பிரதேசம் அதை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் "றோஸ் றீனா புகைப்பட நிலையத்துடன் தொடர்புகொண்டு உங்களது படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

றோஸ் றீனா,
94E,3ம் குறுக்குத் தெரு
நிந்தவூர் -03
(மாந்தோட்ட சாந்தி அருகமையில்)

தொலைபேசி இல.
0777661151 / 0776385491 / 0672251409.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.