புதியவை

ஒரு நாள் கலை விழா -(கவிதை )ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்ஆற்றாமையின் வெப்பத்தில்
தாங்கவொணா துக்கத்தில்
என் இதழ்கள் சாம்பலாகி
வேதனையுடன் உதிர்க்கின்றன
வெப்பக் கவிதையினை இங்கே !
போராடிக் கொண்டு இருக்கிறது என் தேசத்தின் அமைதி !

அஹிம்சை , ஹிம்சையாகி
காவியின் பெயரால்
ஜனநாயக தூவல்கள் !

முகமுடிகளுக்குள் பிதுங்கி
வெளிறித் தெரியும்
வக்கிர மத முகங்கள் !

எரியும் காற்றை படமேடுக்கிறது
கருகிய கபாலத்தில் காலூன்றி !
எங்கு போகிறது என் தேசம் ?
மீண்டும் குருஷேத்ர பூமிக்கு
கடத்திப் போகிறார்களா ?
மொத்தமாய் இங்கு நாம் நிறமிழந்து
குருதியின் நிறத்திற்கு மாறிப் போவோமா ?

அன்னையின் அடிவயிறு
அடிமையாய் நம்மை பிரசவிக்கவில்லை !
அக்னிக் குஞ்சுகள் நாம் ஒருபோதும் தோற்பதில்லை !
பலிகளற்ற சிலுவைகள் எங்குமில்லை
பட்டினிகள் நம்மை தின்பதில்லை!
போராளிகளைப் பிரசவிக்கும் நாடு இது !
இங்கு வலிதாங்கும் மனம்
வலிமையுடன் போராடும் !

எம் தெசத்தின் விடுதலையின் இறுதிப் போர்
இன்னமும் எங்களுக்கு மறக்கவில்லை !
மீண்டும் மீண்டும் எழுந்து வலிய
வாங்கிய பிரம்படிகள்
குருதியாகி , நிறைந்த பூமி இது !
உனக்குள் கனலும் எரிமலைக் குழம்புகள்
திணிப்புகளை எதிர்த்து
வெடித்து சிதற காத்திருக்கின்றன!

உன் அறிவு அமுக்கப்பட்டு
மூளை முடமாக்கப்படும் தருணத்திலும்
நீ மடிந்து போவாயே தவிர
குலைந்து போக மாட்டாய் !
காவிகளுக்கு ஒருபோதும்
பல்லக்கு தூக்க மாட்டாய் !

இன்றைய இரவின் நிச்சயத்தில்
நாளைய விடியலை ஏற்றி வைக்க
கைகோர்த்து உரக்க குரல் கொடுத்து
தலை நிமிர்ந்து போராடுவோம் ! தோழா ! 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.