புதியவை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
பேச்சுவாத்தையை அடுத்து நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
இந்திய பிரதமரை சந்திப்பதற்கு முன்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்திருந்தார்.
நேற்று பிற்பகல் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, உப தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.