புதியவை

களுகங்கை திட்டத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை

களுகங்கை திட்டத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மொரகஹகந்தை மற்றும் களுகங்கை திட்டங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை செய்துகொடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளை நேற்று (10) சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
திட்டத்திற்கு தேவையான பௌதீக மற்றும் மனிதவளங்களை உரிய வகையில் பெற்றுக்கொள்வதற்கும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திட்டத்தை நிறைவுசெய்வதற்கு அவசியமான வளங்களை தடையின்றி விநியோகிப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.
மொரகஹாகந்தை திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 53 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன், 2017 ஆம் ஆண்டு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உமாஓயா திட்டம் காரணமாக நீர் மூலாதாரங்கள் வற்றிப்போவதால், பாதிக்கப்படுகின்ற மக்களுக்குத் தேவையான குடிநீரை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
திட்டத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்காலத்தில் தாம் அந்த பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.