புதியவை

எங்கே எங்கே -லூசியா கூஞ்ஜேமனிதம் எங்கே போய்விட்டது
மிருகமாகி ஈனச்செயலால்
அரக்கனாகி அறிவிழந்து தனைமறந்து
அருவருப்புக்கு ஆளாகின்றானே!


அவமானச் சின்னமாக பிறர்முன்னே
அடையாளப்படுவதில் வெட்கமேயில்லையா..?


பணமும் பதவியும் பக்கபலமாயிருப்பின்
பாதகங்கள் தொடரலாமோ படுபாவிகளே

தாயாய் தாரமாய் சகோதரியாய் சேயாய்
உன்வீட்டிலும் உள்ளதென்பதை மறந்தாயா..?


காமுக வேட்கைக்கு பள்ளி மாணவிகளும்
பச்சிளம் சிறுமிகளும் பலிக்கிடாயாவதா..?

.
தினமும் தொடரும் இந்நிலை மாறுவதெப்போ
தொடர்போராட்டங்கள் மழைபோலப் பொழிந்து
சிலநாட்களில் ஓய்ந்து அமுக்கப்பட்டு விடும்


காலத்தின் நகர்வில் அனைத்தும் மறைந்து விடும்
காமுகர்களின் தொடர்களியாட்டங்களோ வலிக்கின்றது


 வதைபடும் பெண்களையெண்ணி
வழியற்றுப் புலம்பல்தான் வாழ்வாகுமா
வந்திடாதோ ஓர்தீர்வு இவ்வன்முறைக்கு......?

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.