புதியவை

ஷேன் வெட்சன் ஓய்வு


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வெட்சன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

அவர் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு மொத்தமாக 3731 பெற்றதுடன். 75 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த நிலையை எட்டுவதற்கு முன்னரே அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த வருடம் அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஏஸஸ் போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வியை கண்டதன் காரணமாக அவர்ஓய்வு பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியும் என விளையாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து லண்டன் லோட்ஸ் மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குகொண்ட நிலையில், கெண்டைக்கால் தசையில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியின் நடுவே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன்காரணமாக ஏனைய ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் பங்குகொள்ள முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.