புதியவை

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்


மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில்
இன்று (08) காலை பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர்.
மேல் மாகாண முதலமைச்சராக இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார் .
மஹரகம பிரதேச சபை தலைவராக சில காலம் இருந்த இசுர தேவப்பிரிய, மேல் மாகாண சபைக்கு 1991 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார் .
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
மேல் மாகாண முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக இவர் தெரிவு செய்யப்பட்டார் .
இதேவேளை வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும் பதவியேற்றுள்ளார்.
வடமேல் மாகாண சபையின் முன்னாள் தவிசாளராக இவர் செயற்பட்டார்.
முன்னாள் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.