புதியவை

ஜேவிபி இனால் எந்த அழுத்தங்களும் தனக்கு இருக்கவில்லை

ஜேவிபி இனால் எந்த அழுத்தங்களும் தனக்கு இருக்கவில்லை

தனக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு ஜேவிபி இனால் சிறிதளவேனும் அழுத்தம் இருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் எஸ். மாயாதுன்ன தெரிவித்தார். 


அந்தக் கட்சிக்கு சம்பந்தமில்லாத என் மீது நம்பிக்கை கொண்டு ஊழலுக்கு எதிராக தான் முன்னெடுத்த போராட்டத்தை பாராளுமன்றத்திற்குள்ளும் முன்னெடுப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கிய ஜேவிபி இற்கு நான் நன்றியைத் தெரிவிக்கின்றேன் என்றார். 

தன்னை தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுமாறே இந்த நிமிடம் வரைக்கும் ஜேவிபி என்னிடம் கோருகின்றது என்றார். 

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் மாயாதுன்ன, இன்று பாராளுமன்றில் விஷேட உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அத்துடன் உழல் அற்ற ஒரு நாட்டை காண்பதே தனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.