புதியவை

உலகக்கிண்ண ரக்பி தொடர் இரண்டு நாட்களில் ஆரம்பம்

உலகக்கிண்ண ரக்பி தொடர் இரண்டு நாட்களில் ஆரம்பம்



உலகக்கிண்ண ரக்பி தொடர் இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டிகளில் பங்குபெறும் பெரும்பாலான அணிகள் இங்கிலாந்தைச் சென்றடைந்துள்ளன.
உலகக்கிண்ண ரக்பி போட்டிகளில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய அணியை வரவேற்கும் நிகழ்வு இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத் நகரில் நடைபெற்றது.
அனுசரணை நாடான இங்கிலாந்து, வேல்ஸ், உருகுவே ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது.
அவுஸ்திரேலியா தனது முதல் போட்டியை எதிர்வரும் 23 ஆம் திகதி பிஜி அணிக்கு எதிராக கார்டிப் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண ரக்பி போட்டிகளின் வெற்றிக்கிண்ணம் லண்டனுக்குக் கொண்டுவரப்பட்டது.
வெப் எலிசபெத் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெற்றிக்கிண்ணம் தங்கம், வௌ்ளி உட்பட பெறுமதி வாய்ந்த உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நியூஸிலாந்து ரக்பி அணியின் தலைவரான ஜோனா லொமு லண்டன் நகரில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
நடப்பு உலக சாம்பியனான நியூஸிலாந்து எதிர்வரும் 20 ஆம் திகதி தனது முதல் போட்டியில் ஆர்ஜெண்டினாவை எதிர்த்தாடவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.