புதியவை

மரக் கடத்தலில் ஈடுபட்ட வன அதிகாரி கைது

மரக் கடத்தலில் ஈடுபட்ட வன அதிகாரி கைது


மெதகம, கீனகொடை உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத மர கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அந்த வனபகுதி பொறுப்பாளர் ஒருவர் உட்பட மேலுமொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மெதகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்போது சந்தேகநபர்களினால் வெட்டப்பட்டிருந்த மரம் ஒன்றும், அதனை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அவர்களை பிபிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மெதகம பொலிஸாரினால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.