புதியவை

விஷச்செடி-மீ.விசுவநாதன்
இப்போதெல்லாம்
நம்
நாட்டில் அதிகமாக,
மிக வேகமாக வளர்வது
இரண்டே இரண்டுதான்
ஒன்று
கருவேல மரம்
மற்றது
ஊழல் பேர்வழிகள் !

கருவேலமரம்
பூமியின் நீராதாரத்தை 
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாகப் 
புறம்போக் கெங்கும் வளரும் !

அது விஷச் செடி
அதை அழிக்கவேண்டுமாம் !

ஊழல் பேர்வழிகள்
நாட்டின் பொருளாதாரத்தையே
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாக
மட்டுமே வளரும் புறம்போக்குகள் !
தேசத்தின் தீய சக்திகள்
வெளியே தெரியாத விஷச் செடிகள் !

அட..கருவேல மரமாவது
ஏழைக்கு
அடுப்பெரிக்க உதவும்..

இப்பச் சொல்லுங்க

எரிக்க வேண்டிய 
"விஷச்செடி"
கருவேல மரங்களா?
இல்லை 
தீய சக்திகளா?

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.