புதியவை

வேலைக்கார சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக முறைப்பாடு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரைத் தேடும் பொலிஸார்

வேலைக்கார சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக முறைப்பாடு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரைத் தேடும் பொலிஸார்



வேலைக்கார சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைன் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷாகதத் ஹூசைன் வீட்டில் வேலை பார்த்த 11 வயது சிறுமி, ஷாகதத் ஹூசைன் மற்றும் அவரது மனைவி மீது அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஷாகதத்தும் அவரது மனைவியும் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக அந்த சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதற்கிடையே, தனது வீட்டில் வேலை செய்த சிறுமியைக் காணவில்லை என ஷாகதத் ஹூசைனும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வேலைக்கார சிறுமியின் முறைப்பாடு தொடர்பாக ஷாகதத் ஹூசைன் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
29 வயதான ஷாகதத் ஹூசைன் 38 டெஸ்ட் மற்றும் 51 ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடி உள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.