புதியவை

திருகோணமலை "ஈச்சிலம்பற்றை" கவிஞர் த.ரூபன் பற்றி - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
திருகோணாமலை  இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
2002 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டத்தில்சனத்தொகை 93, 441 குடும்பங்களைச் சேர்ந்த 384, 153 மக்களைக்கொண்டுள்ளது
இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
 தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருக்கோணமலையில்,
சுதந்திரத்துக்குப்பின் தொடர்ந்துவரும் அரசாங்கங்கள், சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களின் அரசியல் செல்வாக்கைக் குறைத்து வருவதாகத் தமிழர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
திருக்கோணமலையின் கரையோரப் பிரதேசங்களிலும் பெரும்பான்மையான சிங்களக் குடியேற்றங்கள் அரசாங்கத்தால் நடைபெறுகின்றன.
இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும்.
இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும்.
இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும்.
இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது.
இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது.
 ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது.
பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது
இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.
திருக்கோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது.

அவையாவன. திருக்கோணமலை பட்டினமும் சூழலும் – பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருக்கோணமலை நகரப்பகுதி

இங்கு .ஈச்சிலம்பற்றை – தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம்.

 திருகோணமலை மாவட்டத்தில்  வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலம் எனும் ஈச்சிலம்பற்றையில் தான்.  அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த பச்சை வயல்களும், அவற்றை சுற்றி இனிய தென்னை, பனை, கமுகு ஆகிய மரங்களும் நிறைந்தது பார்ப்பவர் எவரையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும்  ஊரில் தான் தம்பிராசா- தவரூபன் என்ற கவிஞர் பிறந்தார்
இவர் வலையுலகில் ரூபன் என்றே அறியப்படுகின்றார்

தன கல்வியை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தி/மு/ ஸ்ரீ சண்பக மகாவித்தியாலத்திலேயே பயின்றார்.

 உயர்தர வகுப்பில் கலைப் பிரிவில் முதல் முறையிலேயே சித்தியடைந்து
பெற்றோரின் கனவை நிஜமாக்கி பெருமையடைந்தார்.

மேலும் ஆர்வ மிகுதியால் வெளிவாரியாக  பட்டப் படிப்பை முடித்து தி/மு/ மாவடிச்சேனை வித்தியாலத்தில் ஆசிரியாக சில காலம் கடமையாற்றினார்

பின்னர்  விதி  அவரை விரட்ட  (வறுமையை விரட்டிட) வேலை தேடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று,

ஆசிரியத் தொழிலை  விட்டு விட்டு தாயையும் தாயகத்தையும்  மனைவி பிள்ளைகளையும் விட்டு தனியாகவே புறப்பட்டார்

 2006 ம் ஆண்டு  யுத்த நடவடிக்கைகள்  முற்றிய நிலையில்.   பாரிய அழிவுகளை   சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ரூபனுக்கு ஏற்பட்டது.

வீடும் வாழ்வதற்குரிய ஏனைய வாழ்வாதாரங்களும் சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் தப்பினால் போதும் என  மூட்டை முடிச்சுகளோடு ஒடி அடைக்கலாம் தேடி,  ஊர் ஊராக அலைந்தார்

பின்னர்  மட்டக்கிளப்பில் அகதியாகி. இரண்டு வருடங்கள் வாழ்ந்தார்

 2008 ல்   திரும்பவும் சொந்த இடமான திருமலைக்கு திரும்பினார்

ஆனால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் தன்னால்  எதிர்பார்த்தபடி வாழ்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்

அவர் தைரியத்தை விடவில்லை இமைகளை மூடவிடவில்லை. வேதனையின் கொடூரத்திற்கு முகம் கொடுக்க முடியாது குடும்ப அங்கத்தவர் அனைவரும் துவண்டநிலையில் தலைப்பிள்ளை யான. தன் ஊதியம் மூக்குப் பொடி என்று  எண்ணியே மனதை திடப்படுத்திக் கொண்டு தோள் கொடுக்கத் துணிந்தார்

.பெற்றவரின் கண்ணீருக்கும் கைகோர்த்த மனைவி பிள்ளைகளுக்காக அணை போட அலைகடல் தாண்டினார்
முன்னோர்கள் சொன்னபடி திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க தனது சிறு வயதில் இருந்தே தமிழ்ப் பற்று இவருக்கு  அதிகம்.அந்நிய தேசத்தில் அதன் அவசியத்தை அதிகம் உணர்ந்தார்  அதன்பால் பற்று மேலும் அதிகமாயிற்று.
 அழிந்து விடுமோ எனும் ஆதங்கப் பட்டார் . நாம் நாட்டின் அடிமை நிலையும் அவலங்களும்  மிக ஏதாவது சாதிக்கவேண்டும் எனும்வெறி அவரை உந்த ஆயுதத்திற்கு பதிலாக பேனாவை கையில் எடுத்தார்
கோபம், கவலை, பரிதாபம் தன்னை ஆட்கொள்ளும் போது எல்லாவற்றையும் எழுதி தன்னை  ஆசுவாசப் படுத்திக் கொண்டார்
கவிதைகள, சிறு கதைகள் , கணினி சார்ந்த விடயங்கள் என்று எழுதத் தொடங்கினார் . எழுத்துலகில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆறு வருடங்கள் ஆகின்றது
இவரது  படைப்புகள் வலைத்தளத்தில் மட்டும் அல்லாது இலக்கிய படைப்புக்ள் உலகில் பல திசைகளிலும் இருந்து வரும்  சிற்றிதழ்களிலும்  வெளியாகின.
 • காற்றுவெளி-இலண்டன்

 • வல்லமை-இந்தியா

 • தடாகம்-இலங்கை

 • கல்குடா நேசன்-..இலங்கை

 • கவிஞன் இதழ்-இலங்கை

 • மேகம் NEWS-இலங்கை.

 • தமிழ்டைம் பத்திரிகை-கத்தார்

 • இனிய நந்தவனம் இதழ் -இந்தியா

 • முத்துக்கமலம்-இந்தியா

 • ஜீவநதி -.இலங்கை

 • மக்கள் ஓசை-மலேசியா நாள் ஏடு.

 • தமிழ்மலர்-மலேசியா நாள்ஏடு
அத்தோடு இலங்கை தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி.

இலங்கையில் உள்ள வானொலியான சூரியன் பன்பலை. மற்றும் இணைய வானொலியான எழுச்சி. ஆகிய ஊடகங்கள் தொடர்ந்தது

அத்துடன் தமிழ்வளர வேண்டும் எனும் நோக்கில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள எழுத்தாளர்களையும், இளைய சமூகத்தினரையும் ஊக்கப் படுதும்முகமாக  பல போட்டிகளை நடாத்தி வருகின்றார்

 இவற்றில் கவிதைகள் புதுக்கவிதை மரபுக் கவிதை கட்டுரைகள் என யாவும் அடங்கும்.

 பண்டிகை தினங்களான தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்புகளை  ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இவற்றிக்கு பரிசில்களும் வழங்கி வருகின்றார்.தற்போது மலேசியாவில் வசிக்கிறார் .
ஒரு நல்ல கம்பெனியில் SAFTYAND HEALTH EXECUTIVE  ஆக பணி புரிகின்றார்  அப்பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் அ டைக்கின்றார்

இவர்தொழில் எவ்வகையிலும்  இலக்கியப் பணியை தொடர இடையூறு செய்யவில்லை. ஆகையால் இரண்டு வலைபூக்கள்  ஆரம்பித்து கவிதை கட்டுரைகளை படைத்து வருகின்றார் . மேலும் மலேசிய இந்திய எழுத்தாளர்கள் ஒன்று கூடலும் இடையிடையே  நடத்தி வருகின்றார்

   
 இனிய நந்தவனப் பதிப்பக்தின் ஊடாக 13-09 -2015 அன்றுகோலாலம்பூரில்
இவரது கவிதை நூலான ஜன்னல் ஓரத்து நிலா  என்ற கவிதை நூல் வெளியீடு கான்கிறது.

 மலேசியாவில் உள்ளஎழுத்தாளர் கள் மண்டபத்தில்  இலண்டன் கனடா. சிங்கப்பூர் இந்தியா மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கமும் இந்தியர் கங்கிரஸ் கட்சியும் இணைந்து நிகழ்வை நடத்துகிறது


முதல் தடவையாக கவிதைத் தொகுப்பு வெளியீடு வருகிறது

இரண்டாம் கட்டமாக சிறுகதை .தொகுப்பும் மற்றும் நான்கு கவிஞர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டு முற்சியில் கவிதைத் தொகுப்பு சிறுகதை வெளியிட உள்ளார்  இது சம்மந்தமான வேலைத்திட்டங்கள் நடைபொறுகிறது.

திருகோணமலை .யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்.புதிதாக வலைப்பூக்கள் திறப்பது எப்படி ஒரு கவிதையை பதிவிடுவது சம்மந்தாமான பயிற்சி வகுப்புக்கள் இலக்கியத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடத்துகின்றார்

 தமிழ்மொழியின் புகழ் வளரட்டும்...வாழும்வரை இலக்கிய பணி தொடரட்டும் என்று  நிறைவோடு வாழ்த்துகின்றேன்No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.