புதியவை

உலா வரும் வெண்ணிலா-சரஸ்வதி ராசேந்திரன்

     
 காதல்
குலக்குழுந்தாகிய குமரியே  ஏனோ
கலக்கமுற்றது போல்  காணுவை
நினக்கென் உடலுக்கெதுவும் நலக்குறைவா  ?
என்றுமிலாகுவி முகத்துடன் நீ
வேதனப்படுவதும் வி ந்தையே  !
தந்தையே !
சோதனையான சுழலில்சிக்கினேன்
தோழிகள் தூண்டிட கவியரங்கில் 
பங்கு கொண்டு பாடிட விரைந்தேன் 
பள்ளங்கண்டு  பாயும் ஆறென
காதலறியாக்   காரிகை எனதுள்ளம்
மோதியலைந்து   முழுமை ஆகிய
விந்தையை   நான் விளம்புவதெப்படி?
மகளே !
கற்பனைச்  செறிந்த கவிதையில் மயங்கி
பொற்புறு குணவதி அவ்வற்பனை மணக்க 
விழைகிறாய் அவன்றான் வேற்றவள் ஒருத்தியின்
ஆசை  நாயகனென  அறிந்திடாயோ  நீ
அகற்றிடு அவனை உன் உள்ளத் தமர்ந்திட
குலத்திலும்  குணத்திலும் குறைவிலா ஒருவனை
கொண்டு வருவதொரு தந்தையின் கடமையில்லையா?
தந்தையே  !
ஆடவனொருவனை அகத்தில் வரித்தபின்
நாடி மற்றொருவனை நயந்திடல் நியாயமோ?
அப்பாவின் மகளே அருமைக்குணவதி
செப்பருந்   துறவினில் இப்புவி வாழ்வை
கழிக்க  இயலுதல்  காணச் சகியேன் அம்மா
அப்பா  !
நித்தம் உலா வரும் வெண்ணிலா
தேய்ந்தும் மறைந்தும் போகும் ஆனால்
சூரியனோ சுருங்குவதில்லை 
பாரியாள்  காதலும்  அப்படியே
என் மனக் கட்டெறும்பெங்கும் செல்லாதினி
பொன் மனத்தந்தையே குற்றம் பொறுக்க !
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.