புதியவை

தேர்தல் முறைமை தொடர்பில் இவ்வருட இறுதியில் தீர்வொன்றை எட்ட முடியும் – பிரதமர்


தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வைபவம் ஒன்று நடைபெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல்கள் ஆணையாளர், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், திணைக்களத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது;
தேர்தல் முறைமை தொடர்பில் எமக்கு தற்போது மூன்று விடயங்கள் உள்ளன. முதலாவது விருப்பு வாக்கு முறைமையற்ற புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்குதல். அதன்போது எமக்கு விகிதாசார தேர்தல் முறைமை அல்லது தொகுதிவாரி தேர்தல் முறைமையின் மாதிரிகள் இருக்கலாம். இந்த இரண்டு முறைகளையும் சமாந்திரமாகக் கொண்டு செல்வதா அல்லது நியூசிலாந்து போன்று கலப்பு முறையொன்றுக்கு செல்வதா என்பது தொடர்பில் நாம் ஆராய்வோம். அடுத்த சில மாதங்களில் இது தொடர்பில் கலந்துரையாடி இந்த வருட இறுதியில் தீர்வொன்றை எட்ட முடியும் என்று எதிர்பார்கின்றோம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.