புதியவை

ஏற்றுமதி மேம்பாட்டின் ஊடாக அபிவிருத்தி மேம்பாடு


ஏற்றுமதிகளை மேம்படுத்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அபரிமிதமாக மேம்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஷர்ஷா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதனை எட்டுவதற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் செஸ் உட்பட சகல வரிவிதிப்புக்களிலும் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாசனை திரவியங்கள் மற்றும் அத்துடன் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி மற்றும் வர்த்தக சங்கத்தின் வருடாந்தர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சில குறிப்பிட்ட வர்த்தக குறியீடுகளின் கீழ் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு செஸ் வரி விதிக்கப்படுகிறது.

இப்படியான குறியீடுகளில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறைந்ததாக இருப்பின், காலப்போக்கில் ஏற்றுமதி நடவடிக்கைகள் பாரிய அளவில் பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்றுமதி குறைவடையும் போது நாட்டின் பணத்தின் பெறுமதி குறையத் தொடங்கும்.

இது இலங்கை போன்ற வளர்முக நாடுகளை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவும் ஷர்ஷா டீ சில்வா தமது உரையில் குறிப்பிட்டார்.

நாம் பொருளாதாரத்தில் வெற்றி பெற வேண்டுமானால், ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிக அளவில் அதிகரிக்க வேண்டும்.

அப்போதுதான், எமது நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் தரம் உயர்வதுடன் அதிக அளவிலான பொருட்களுக்கான் வர்த்தக கட்டளைகளை வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் வழங்குவர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.