புதியவை

பெருந் தோட்டமக்களை கிராம மக்களாக உயர்த்தும் திட்டம் - அமைச்சர் திகாம்பரம்



பெருந்தோட்ட மக்கள் என்ற அடையாளத்தை ஒழித்து அவர்களையும் கிராம மக்கள் என்ற வகுதிக்குள் கொண்டு வர அரசாங்கம் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராம அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறுப்பை இன்று கொள்ளுப்பிட்டி அமைச்சு அலுவலகத்தில் அவர் ஏற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர்,  இந்திய வம்சாவளி மக்களை மலைநாட்டு மக்கள் என்று தமது எழுத்துக்களால் உருவகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசியசஙகத்தின் ஆலோசகருமான கவிஞருமான சி வி வேலுப்பிள்ளையின் 101வது ஜனனத்தினத்தில் இந்த அமைச்சுப்பணிகளை பொறுப்பேற்றுள்ளமை பெருமை மிக்க நிகழ்வு என்று குறிப்பிட்டார்.



No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.