புதியவை

அரசாங்கம் தமக்கு இசைவான எதிர்கட்சியொன்றை உருவாக்கியுள்ளது


புதிய அரசாங்கம் தமக்கு இசைவான எதிர்கட்சியொன்றை நாடாளுமன்றத்தினுள் உருவாக்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது முன்னணியின் பேச்சாளர் மொஹம்மட் முசம்மில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியை பலவீனமடைய செய்யும் ஒரு கலாசாரமே தற்போது நிலவுகிறது. 

1995 ஆம் ஆண்டு அதிகாரத்துடனான கருத்து வாதத்திற்கு தற்போது இடமில்லை. இருந்தபோதும், எதிர்கட்சியை கொள்ளையிடும் கலாசாரமா தோன்றியுள்ளது என அவர் மொஹமட் முசம்மில் கேள்வியெழுப்பினார்.

இந்தநிலையில், ஜே.வி.பி எந்தவொரு காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாத ஒரு கட்சியாக இருக்கின்றது.

எனவே, மக்கள் பலத்தை நாடாளுமன்றத்தில் வாயடைத்துப் போகச் செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

பிரிவினைவாத்தை நோக்கி ஏணிப் படி வைத்து செல்லும் நிலை தோற்றியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹம்மட் முசம்மில் தெரிவித்தார்.

இதேவேளை, அந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் முன்னணியின் பிரதி செயலாளர் கபில கமகே, புதிய அரசாங்கம் அமைத்துள்ள அமைச்சுக்களில் பொறுத்தமற்ற தன்மை நிலவுவதாக தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.