புதியவை

கோட்டாபய ராஜபக்ஸ மோசடிகள் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்

கோட்டாபய ராஜபக்ஸ மோசடிகள் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று முற்பகல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆஜராகியிருந்தார்.
றக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் சாட்சியமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.
இன்று சாட்சியம் வழங்கியவர்களுள் றக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ.சில்வா தெரிவித்தார்.
துமிந்த சில்வா, ரோஹித்த போகொல்லாகம மற்றும் டனசிறி அமரதுங்க ஆகியோரும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகியிருந்தனர்.
பாரிய மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி விசார​ணை ஆணைக்குழு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ளது.
5 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணகைள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.