புதியவை

இலங்கை - அவுஸ்திரேலியா வர்த்தக நடவடிக்கைகள் உயர்வு


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் 18 சத வீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 42 கோடி அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் ரொப்யன் மூடி தெரிவித்துள்ளார்.

இந்த தொகையினை மேலும் அதிகரிப்பதற்கான பல்வேறு அனுகூலங்கள் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வித் துறைகளில் அவுஸ்திரேலியா அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கடந்த வருடத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து 62 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட வருடாந்தரம் 15 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.