புதியவை

எள்ளுக்காடு சிறுமியின் எச்சங்கள் தொடர்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


கிளிநொச்சியில் எள்ளுக்காடு பகுதியில் மீட்கப்பட்ட 3 வயது சிறுமியின் எச்சங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் ஜென்டெக் நிறுவனத்திற்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த எச்சங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படாததால் வழக்கு விசாரணையைத் தொடர முடியாதுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உருத்திரபுரம் – எள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் ஜெருசா என்ற 3 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி காணாமற்போயிருந்தார்.
ஜுலை மாதம் 21 ஆம் திகதி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய வயல்வெளியிலிருந்து சிறுமியின் எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 15 வயதான சந்தேகநபரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று வயது சிறுமியை தாம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் ஒப்புதலளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.