
நிழற்படம் எடுப்பவர்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாகக் காணப்பட்ட செல்ஃபி நிழற்படம் எடுக்கும் நடைமுறை, புதிய தொழில்நுட்ப முறையான கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவது பெரியோர் மாத்திரமன்றி சிறார்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்துள்ளது.
துக்கம் மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் செல்ஃபி எடுக்கப்படுகின்றமை இன்று வழமையான நடைமுறையாக மாற்றமடைந்துள்ளது.
எவ்வாறாயினும், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 12 பேர் இந்த ஆண்டில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக Mashable இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமிங்கிலங்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்போரை விடவும் செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அனைவராலும் பேசப்படுகின்ற செஃல்பி விபத்து கடந்த வாரம் இந்தியாவின் தாஜ்மஹாலில் பதிவானது.
தாஜ்மஹாலைப் பார்வையிடச் சென்ற 66 வயதான ஜப்பான் நாட்டு பிரஜை, செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.
கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையிலும் செல்ஃபி எடுக்கச் சென்ற வேளையில் அசம்பாவிதம் ஏற்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில், மாத்தறை நுபே பகுதியில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.