புதியவை

கவிக்கொரு கவியே பாரதி-நாகினி


உரிமையது எதுவென்றுநல் கவிதைமலர் தொடுத்து
அரிதாய்யிது தமிழ்ப்பாவென விதைவீறுடன் பரப்பி
வரிகோரிய வெளிநாட்டினர் மதிசாடிடும் திறத்தைச்
சரிபாதியில் ஒருநீதியாய் கொடுத்தானவன் கவியே!

இயற்கையிலும் வளர்த்தேன்தமிழ் சிறப்புச்சிமிழ் வடித்து
கயற்க்கண்நடை தெளியும்கவி வடித்தேயிரு கரத்தின்
செயல்ஓங்கிட உரமாய்த்தினம் தொழுதேக்கதை படிக்க
நயமாய்ச்சொலும் எழுத்தால்திறம் மிளிர்ந்தானவன் கவியே!

அடிமைத்தளை உடைத்தேபுது நடைபோட்டிட மகளிர்
கடிவாளதை முறித்தேவெளி உலகாளவே எழுந்த
இடியோசைக் கவிகள்நிதம் புதுமையுடன் படைத்தே
ஒடியாமலே உணர்வோங்கிட உரமாகியோன் கவியே!

மயங்காபுகழ் தனைச்சேரவே படைத்தானிலை எதுவும்
தயங்காதுரைத் திடும்பாங்கினில் உயர்ந்தானவன் புகழால்
இயலாம்தமிழ் எழுத்தால்கவி புனைந்தானவன் புலவன்
அயராதுழைத் தரும்பாடலுக் கொருபாரதி தமிழன்!

... 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.