புதியவை

ஸ்ரீபுர நெசவுசாலைக்கு மின்சார வசதி

ஸ்ரீபுர நெசவுசாலைக்கு மின்சார வசதி



பொகவந்தலாவை - ஸ்ரீபுர கிராமத்திலுள்ள நெசவுசாலைக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 55,000 ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். 

மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சுக்குக் கீழ் இயங்கும் 50 வருடம் பழைமை வாய்ந்த பொகவந்தலாவை ஸ்ரீபுர கிராம நெசவுசாலைக்கு மின்சார வசதிகள் இல்லை. 

இதனால் இந்த நிலையத்தில் சேவையாற்றும் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்த, அதேவேளை தமது தொழிலை நவீன யுகத்திற்கேற்ற வகையில் முன்னேற்ற முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர். 

இவ்விடயம் குறித்து மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவர் அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக நிதியொதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.