புதியவை

தேர்தல் பிரசாரத்திற்கு ரக்னா லங்கா ஊழியர்களைப் பயன்படுத்தியமை ஒப்புக்கொள்ளப்பட்டது



கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு ஊழியர்களைப் பயன்படுத்தியமையை அந்த பாதுகாப்பு சேவையின் முகாமையாளர்களில் ஒருவரான மேஜர் ஜானக்க பெரேரா இன்று ஏற்றுக்கொண்டார்.
பாரிய ஊழல் மற்றும் மோசடியை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனை ஒப்புக்கொண்டார்.
ரக்னா லங்கா பாதுகாப்பு சேவைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் முதற்கட்ட சாட்சி விசாரணை இன்று முற்பகல் ஆரம்பமாகியது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ரக்னா லங்கா பாதுகாப்பு சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, தலைவர், முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை கல்கிஸ்ஸை நகர மேயர் தனசிறி அமரதுங்க, கோட்டே நகர மேயர் ஜனக்க ரணவக்க ஆகியோர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் மற்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்டோரைக் கொண்டமைந்த இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ரக்னா லங்கா பாதுகாப்பு சேவையுடன் தொடர்புடைய அதிகாரிகள் இன்று முதற்கட்டமாக சாட்சியமளித்தனர்.
இதன்போது, பாதுகாப்பு சேவையின் மேற்கு இரண்டாம் பிரிவிற்கு பொறுப்பான முகாமையாளர் மேஜர் ஜானக்க பெரேரா, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் ரக்னா லங்கா சீரூடையில் கடமைகளில் ஈடுபட்டமையை ஏற்றுக்கொண்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.