புதியவை

வித்யாவின் கண் பகுதியில் காணப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு


யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை மேலும் ஒரு தடயப் பொருளாக சட்ட வைத்திய அதிகாரி, நீதிமன்றதில் இன்று சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய இந்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, ஜின்டெக் நிறுவனத்திற்கு
அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திறக்கு நீதவான் எஸ்.லெனின் குமார் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிகணணி கையடக்க தொலைபேசி மற்றும் TAB ஆகியவற்றில், குற்றச்செயல் தொடர்பான காட்சிகள் அல்லது புகைப்படங்கள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் மொரட்டுவை பல்கலைக்ழகத்தில் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் நீதிமன்றத்தில் இன்று (16) சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து குறித்த தடயப் பொருட்களை மேலதிக ஆய்விற்காக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவிற்கு அனுப்பிவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அதுவரை 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.