புதியவை

அமைச்சரவை அதிகரிப்பு விவகாரம்: மஹிந்த ஆட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அமைச்சரவை அதிகரிப்பு விவகாரம்: மஹிந்த ஆட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெளிவு இல்லை என்பதால் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 


அமைச்சரவையை 30இல் இருந்து 45-48வரை அதிகரிப்பதன் காரணம் என்ன? 48 அமைச்சுக்கள் என்ன? அதில் உள்ளடங்கும் துறைகள் என்ன? இராஜாங்க அமைச்சு எத்தனை? பிரதி அமைச்சு எத்தனை? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

எனவே முழுமையான தெளிவு இன்றி பிரேரணைக்கு ஆதரவு அளிக்க முடியாது என அவர் கூறனார். 

தாம் எதிர்பார்க்கும் தெளிவுகள் கிடைக்காவிடின் இன்று மாலை 6 மணிக்கு பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரவுள்ளதாவும் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களிக்கும் என்பதுடன் தனித் தனியே ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்க வேண்டும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். 

கடந்த காலங்களில் அமைச்சரவை அதிகம், சாதாரண மக்கள் மீது சுமை சுமத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கமும் அதனையே செய்ய முயற்சிக்கிறது. அப்படியானால் ராஜபக்ஷ ஆட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று அநுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார். 

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி அல்ல அதனால் அக்கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்ட ஒப்பந்தம் பாராளுமன்றில் செல்லுபடியற்றது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதென்றால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் என்னவென்று பகிரங்கப்படுத்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரது பெயரால் தேசிய அரசாங்கம் உயிர்பெற்றுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.