புதியவை

மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்

மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்


மேல் மாகாண சபையின் அமைச்சர்களாக நால்வர் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 


அதன்படி முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும் அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

இதேவேளை, வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார். 

மேலும் வட மேல் மாகாண அமைச்சர்களாக குணதாச தெஹிகம, சமந்த குமார ராஜபக்ஷ, லக்ஷமன் ஹரிச்சந்திர மற்றும் சுமல் திசேரா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

பின்னிணைப்பு - அமைச்சு விபரங்கள் வருமாறு, 

மேல் மாகாண சபை 

01.முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய - நிதி, பொறியியல் சேவை, சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி சபைகள் மாகாண நிர்வாகம், பொருளாதார அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, சுற்றாடல், நீர்வழங்கல் நீர்பாசனம், சுற்றுலாத்துறை அமைச்சர். 

02.ரஞ்சித் சோமவங்ச - கல்வி, கலை கலாசார, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர். 

03.காமனி திலகசிறி - சிறைச்சாலை, மாகாண விவசாயம், காணி, நீர்பாசனம், விலங்கு உற்பத்தி, சுகாதாரம், விவசாய அபிவிருத்தி அமைச்சர். 

04.லலித் வணிகரட்ன - மீன்பிடி, வீதி, போக்குவரத்து, நுகர்வோர் அபிவிருத்தி, வர்த்தகம், வீடு, முகாமைத்துவம், தோட்ட உட்கட்டமைப்பு, தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர். 

05.நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க - சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக நலன்புரி, இல்லம் சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகாரம் மற்றும் சபை நடவடிக்கை தொடர்பான அமைச்சர். 

வடமேல் மாகாணம் - 

01.முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க - நிதி, பொறியியல் சேவை, சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி சபைகள் மாகாண நிர்வாகம், பொருளாதார அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, சுற்றாடல், நீர்வழங்கல் நீர்பாசனம், சுற்றுலாத்துறை அமைச்சர். 

02.சமந்த குமார ராஜபக்ஷ - கல்வி, கலை கலாசார, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர். 

03.லஸ்ரீமன் ஹரிச்சந்திர - சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக நலன்புரி, இல்லம் சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகாரம் மற்றும் சபை நடவடிக்கை தொடர்பான அமைச்சர். 

04.சுமல் திசேரா - மீன்பிடி, வீதி, போக்குவரத்து, நுகர்வோர் அபிவிருத்தி, வர்த்தகம், வீடு, முகாமைத்துவம், தோட்ட உட்கட்டமைப்பு, தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.