புதியவை

சஜின் வாஸ் குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்

சஜின் வாஸ் குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று (08) அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 23 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு இன்று (08) மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதுடன் சஜின் வாஸ் குணவர்த்தனவையும் அந்த தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.