புதியவை

சரத் சந்திரசிறி மாயாதுன்னே பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

சரத் சந்திரசிறி மாயாதுன்னே பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் விசேட உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சரத் சந்திரசிறி மாயாதுன்னே தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகமான சரத் சந்திரசிறி மாயாதுன்னே மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கணக்காய்வாளர் நாயகமாக ஆற்றிய சேவை மற்றும் நாட்டிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட விதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு முன்வந்தபோது சுயாதீனமாக செயற்பட முடியும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமையவே பாராளுமன்றத்திற்கு பிரவேசித்ததாகவும் சரத் சந்திரசிறி மாயாதுன்னே கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்கு முடிவுகள் மற்றும் தேர்தல் முடிவுகளை கவனத்திற்கொள்ளும்போது மக்கள் எத்தகைய பிரதிநிதிகளை விரும்புகின்றார்கள் என்பது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தம்மைப் போன்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியானவர்கள் அல்லவென்பதே தமது நிலைப்பாடு எனவும் சரத் சந்திரசிறி மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலா​ஷைக்கு அமையவே பாராளுமன்ற ஆசனத்தை துறப்பதற்கு தீர்மானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது இந்த முடிவுக்கு மக்கள் விடுதலை முன்னணி எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை எனவும் தனது கன்னி உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் சந்திரசிறி மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.