புதியவை

டெங்கு நுளம்பு பெருகும் அபாயமுள்ள பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்க புதிய திட்டம்

டெங்கு நுளம்பு பெருகும் அபாயமுள்ள பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்க புதிய திட்டம்



டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ள பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கும் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹசித திசேரா கூறுயுள்ளார்.
அதன்படி டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ள 7500 பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1700 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நுளம்புகள் பரவக்கூடிய வகையிலான 52,000 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 6200 பகுதிகளில் நுளம்புக் குடம்பிகள் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு
ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.