புதியவை

பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தல்

பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தல்

5 வது தடவையாக இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மாநாடு இன்று இரண்டாவது நாளாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெறுகின்றது. 


"உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறும் அதேவேளை விஷேட பிரதிநிதியாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கலந்து கொண்டுள்ளார். 

விஷேட பிரதிநிதியாக வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் நேற்றையதினம் இங்கு உரையாற்றி இருந்தார். 

பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். 

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை முற்றாக மாற்றமடைந்துள்ளதுடன் அமைதியான நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஏனைய நாடுகளுக்கு இலங்கை எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.