புதியவை

இம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-ப.குப்புசாமி .இந்தியா .


பெண்மை போற்றுவோம் 

மாதவம்செய், மாதராக 
பிறக்க; சொல்வர்.
வாதத்தை நம்பாதீர்!
பசப்பு வார்த்தை ;
பாதகங்கள் பலகோடி ,
நடிப்பால் நாட்டில் ;
சூதகமாய தெய்வமென்றே
தொழுவர் பொய்யாய் .

ஆடுமாடு அஃறிணையாம்
அதற்கிணை யாக
பாடுபடும் காரணத்தால்
"அது"வாய் சொல்லி ;
கேடுகெட்ட வன்கொடுமை
நடக்கும் இந்த;
நாடுஇனி சுடுகாடு
என்றே! சொல்வோம் .

கருவில்கண் டறிந்தவுடன்,
கலைக்க வேண்டும்;
உருவாகி வெளிவந்தால்
கள்ளிப் பாலே!
இருபத்தா றுநிமிடத்தில்
இந்திய நாட்டில்
கருஅழிப்பு நடக்கிறதாம்
கணக்கு சொல்லும் .

குருதியை பாலாக்கி,
கொடுக்கும் தாய்மை;
தெருவினில் நாயாக,
அலைய லாமோ ?
பெருமைக்கு பஞ்சமில்லை
உயர்திணை யாக ;
கருதுகிற தமிழர்தம்
அகராதி மெச்சும்!

வெட்டிப்போட் டாலும் தீ
சுட்டாலும் மேலை
எட்டிவரும் செங்கரும்பாய்
எழுத்தார் பெண்மை!.
கொட்டிக்கொட் டியேகீழே,
குனிந்தப் போதும்;
முட்டிமுட்டி இமயமாய்
உயர்ந்தார் உண்மை!.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.