புதியவை

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளை ஆராய விசேட குழு


ஜனாதிபதிக்கும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ளார்
அரச தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பின்னர் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்
பொலிஸ் திணைக்களத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதன்போது திணைக்களத்தில் இடம்பெற ​வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் தொடர்பிலான பிரச்சினை, விடுதிப் பிரச்சினை மற்றும் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த அனைத்து பிரச்சினைகளும் துரிதமாக தீர்வு வழங்கப்படவேண்டிய நியாயமானவை என தாம் கருதுவதாகவும் ஒரு மாதத்திற்குள் படிப்படியாக அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி கடமைகளை நிறைவேற்றி அதிகபட்ச திருப்தியடைவதற்கான சந்தர்ப்பம் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்ததாக பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழல் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் நன்றையை ஜனாதிபதிக்கு பொலிஸ்மாஅதிபர் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.