பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட சந்திரா இரவீந்திரன் அவர்கள் கவின் கலை மாமணி விருது பெறுகின்றார்
பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட சந்திரா இரவீந்திரன் அவர்கள் கவின் கலை மாமணி விருது பெறுகின்றார்
த டாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
த டாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை
ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு மாதாமாதம் (கௌரவித்து வருகின்றது
இனம் கண்டு மாதாமாதம் (கௌரவித்து வருகின்றது
இம் மாதம் கௌரவிக்க்ப்படுபவர் இவர்
இம் மாதம் கௌரவிக்க்ப்படுபவர் இவர்
புலோலி இலங்கையின் வடமாகாணத்தி ல் உள்ள ஒரு நகரமாகும்.
பருத்தித்துறை வீதியில்(யாழ்ப் பாணத்திலிருந்து
சுமார் 30 கி.மீ தொலைவில், பருத்தித்துறைக்குச் சமீபமாக அமைந்துள்ளது.புலோலி
பழம்பெரும் பாரம்பரியத்தையும் நீண்ட புராதன மொழி, சமய கலாசார மரபு விழுமியங்களையும் தனித்துவமாகத் தன்னகத்தே கொண்ட புகழ்பூத்த தொன்மைக் கிராமம் ஆகும்.
புலவர்களின் குரல் ஒலித்தமையால் புலோலி என்னும் காரணப்பெயர் இதற்கு சூட்டப்பெற்றது என்பது கல்விமான்களின் முடிவு பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மறுபெயருமுண்டு.
பருத்தித்துறை நகரசபையின் தெற்கு எல்லை இதன் வடக்கு எல்லையாகவும்,
பருத்தித்துறை மருதங்கேணி வீதி இதன் கிழக்கு எல்லையாகவும்,
துன்னாலை, அல்வாய் என்னும் கிராமங்கள் முறையே இதன் தெற்கு மேற்கு எல்லைகளாகவும் அமைந்துள்ளன.
அரச நிர்வாக நோக்கில், புலோலி திக்குவாரியாக 14 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள் போன்றோர் புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அறியப்படுகிறது
இந்த புலோலியை பிறப்பிடமாக கொண்டவர் தான்
சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் அ
வர்கள்
தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி.
இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்ற பின்பு
யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார்.
தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார்
.
சந்திரா
1981ல் " ஓருகல் விக்கிரகமாகிறது" என்ற முதற் சிறுகதை முலம் இலங்கை வானொலி வாயிலாக செல்வி .சந்திரா தியாக ராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்
இவர் ஓர் எழுத்தாளர் .கவிஞர் விமாசகர்.ஒலிபரப்பாளர் .பேச்சாளர் .சமூகபணியாளர் .பன்முக ஆற்றல் கொண்டவர்
இளமைக் காலம்
இளமைக் கல்வி இலங்கை பருத்தித் துறை யாழ் வடமரா ட்சி இந்து மகளீர் கல்லூரியில் வகுப்பு வரை கல்வி கற்றவர்
பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் மேற் கல்வி கற்றார்
அச்சமயம் ஈழமுரசு .ஈழநாடு .பத்திரிகைகளின் பருத்தித்துறை நிருபராகவும்
பணியாற்றிக் கொண்டிருந்தார்
யாழ் தமிழ் ஒழி வானொலி நேயர் மன்றத்தின்செயற்குழு உறுப்பினரா க இருந்து இலங்கை வானொலியிலிருந்து வருகை தரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் வானொலி நிகழ்ச்சிகளைக் குழுக்களாக இணைந்து தாயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்
தொழியில்
இலங்கை .யாழ் பருத்தித்துறை மாவட்ட மன்றத்தில் ஒன்றரை வருடங்கள் பயிற்ச்சிப் பணியாளராகப்பணி யாற்றினார்
1987ல் இலங்கை அரசு சார்பில் நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட -யாழ் அரச செயலகத்தின் தொழிலித் தேர்வுப் ப ணியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையில் (தமிழ் வேகச் சுருக்கெழுத்து ,தமிழ் வேகத் தட்டெழுத்து உட்பட)
முதலாவது சிறப்புப் பு ள்ளிகளுடன் தெர்த்தெடுக்காட்ட ஒரேயொரு பணியாளர் என்ற பெருமையுடன் அரச தொடர்பு நிர்வாகப் பிரிவில் தெரிவாகிப் பணியாற்றினார் தொடர்ந்து.போக்கு வரத்து வரித்திணைக்களத்திலும்.ஓய்வூதி யத் திணைக்களத்திலும் 1991ம் ஆண்டு வரை நான்கு வருடங்கள் பணியாற்றினார்
எழுத்துத்துறை
1981(18வது வயதில்) -முதற் சிறுகதை "ஒரு கல்விக்கிரமாகிறது".
1991வரை இலங்கையின் முக்கிய பிரபல பத்திரிகைகளான வீரகேசரி .தினகரன் .ஈழநாடு ஈழமுரசு மற்றும் பிரபல சஞ்சிகைகளான மல்லிகை .சிரித்திரன் .அரும்பு போன்ற பத்திரிகைகளில் இவரது இவரது சிறுகதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தமை குறிபிடத் தக்கது
பின்னர் .இவர் 1991ல் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்து வந்த பின்னர் எரிமலை.பாரிஸ் ஈழநாடு ..திண்ணை கீற்று .காலச்சுவடு .ஊடறு .பெண்கள் இதழ் மற்றும் பிரித்தானிய தமிழர் தொண்டு நிறுவனமான "ருவான் "வெளியீட்டு இதழ்களான "யுகம் மாறும் "{ "கண்ணில் தெரியுது வானம் "ஆகிய தமிழியல் வெளியீடு களில் இவரது சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் வெளியாகின
மற்றும் லண்டன் ஐபிசி தமிழ் -அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வெளியீ டான "புலம் "சஞ்சிகை இதழ்களிலும்
இவரது சிறுகதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்ததன
திரைப்படத்துறை
இலண்டனில் இயங்கி வரும் "விம்பம் "சர்வதேச தமிழ்க் குறுந் திரைப்படக் கழகத்தி
குறுந் திரைப்படத் தெரிவுக் குழுவில் இணைந்து பணியாற்றுகிறார் .
விருதுகள்
1984ல் யாழ்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த பிரபல சஞ்சிகைகளில்
ஒன்றான "சிரித்திரன் "சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது " சிவப்புப் பொறிகள் "சிறுகதை பரிசிலைப் பெற்றுக் கொண்டது
1986ல் யாழ் இலக்கிய வட்டம் நடாத்திய இரசிகமணி கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இவரது " நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் "குறுநாவல் பரிசைப் பெற்றுக்கொண்டது
தொடர்ந்து இந் நாவல் இலங்கையின் முக்கிய பத்திரிகையான "ஈழநாடு "பத்திரிகையில் தொடராகப் பிரசுரமாகிக் கொண்டிருந்தது
தொடர்ந்து பிரான்சில் "பாரிஸ் ஈழ நாடு"பத்திரிகையிலும் இந் நாவல் வாரா வாரம் தொடந்து பிரசுரமாகிக் கொண்டிருந்தது
1991ல் பிரான்ஸ் "பாரிஸ்நாடு "நடாத்திய ஐரோப்பியச் சிறுகதைப் போட்டியில் இவரது "அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் "சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது
1993ல் செ.யோக நாதன். சுந்தரலட்சுமி ஆகியோர் இணைந்து தமிழ் நாட்டில் வெளியிட்ட "வெள்ளிப் பாதசரம் " இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் தொகுப்பில் இவரது "தரிசு நிலத்து அரும்பு "சிறுகதை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
வெளியாகிய நூல்கள்
1. " நிழல்கள்" - 1988ல் இலங்கை யாழ்.பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டம் இவரது முதற் சிறுகதை - குறுநாவல் தொகுப்பு வெளியிட்டது. யாழ். வடமாராட்சிப் பகுதியில் இலங்கை இராணுவம் நடாத்திய "லிபறேசன் ஒப்பரேசன் " இராணுவ நடவடிக்கையின் பின்னர் முதல் நூல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டு நிகழ்வில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார்.
2. "நிலவுக்குத் தெரியும்" - 2011ல் தமிழ்நாடு - "காலச்சுவடு" பதிப்பகம் இவரது சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டது. இந்நூல் வெளியீட்டு நிகழ்வுகள் தமிழ் நாட்டிலும் பிரித்தானியாவிலும் நடைபெற்றன.
.
இலண்டனில் ஏனைய பணிகள்
1. 1999 - 2007 வரை இலண்டன் - அனைத்துலக ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தில் "சூரியவேர்கள்" , "சமுத்திரா" என்ற முக்கியமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தார்.
2. இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இருந்து செயலாளராகவும் பின்னர் 2014ம் ஆண்டு வரை 12 வருட காலம் சங்கத்தின் உறுப்பினராக இருந்து, செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றினார். இலண்டனில் பிறந்து வளரும் தமிழ் சிறார்களுக்கான கற்பித்தல், தமிழர் கலைகளை கற்பித்தல் ஆகிய பணிகளை இச்சங்கத்தின் முக்கிய பணிகளாகக் கொண்டு முன்னின்று செய்து வந்தார்.
1999ம் ஆண்டிலிருந்து இலண்டன் ஆங்கில தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப் பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் அர்ப்பணித்துள்ளதுடன் அச்சங்கத்தின் தலைவராகவும் கொண்டிருக்கிறார்.
3. இச்சங்கத்தின் ஆண்டுக் கலை விழாக்கள், மற்றும் சங்கத்தின் நூல் வெளியீடுகள் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றினார். பாடசாலை மாணவர்களுக்கான நாடகப் பிரதிகளை எழுதி தமிழ் மாணவர்களை மேடைகளில் அரங்கேற்றும் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. பிரித்தானிய மகளிர் அமைப்பில் உறுப்பினராக இருந்து செயலாற்றி வந்தார்.
5. தற்போது இலண்டனின் பிரபல வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.
6. இலண்டனில் தமிழ்மொழி> தமிழர்கலை> தமிழர்களுக்கான சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சந்திரா இரவீந்திரன் அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராக> ஒலிபரப்பாளராக> விமர்சகராக> பேச்சாளராக வியப்புறும் வண்ணம் செயற்றிறன் மிக்க சிறந்த பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.
இவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல் முகத்திரைக்குள் முடங்கி விடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன். இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய வட்டம் கல்வி,கலை,கலாசார,சர்வதேச அமைப்பு
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.