புதியவை

தாலிபான் போராளிகள் சிறை உடைத்து கைதிகளை விடுவித்துள்ளனர்



ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள், சிறை ஒன்றை உடைத்து 350 கைதிகளை விடுவித்துள்ளனர்.


இதன்போது நான்கு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

இராணுவ சீருடைகளில் வந்த போராளிகளே இந்த  தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முதலாவது போராளிகள் ஒருவர் சிறைச்சாலையின் வாயிலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பின்னரே ஏனைய போராளிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாலிபான் போராளிகள் இந்த தாக்குதலுக்கு உரிமைக்கோரியுள்ளனர்.

அத்துடன் தமது தரப்பில் 3போராளிகள் பலியானதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே 2011ஆம் ஆண்டு தாலிபான் நடத்திய சிறையுடைப்பு தாக்குதல் ஒன்றில் 500 கைதிகள் வரை சுரங்கம் ஒன்றின் ஊடாக தப்பிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.