புதியவை

நீங்கா துயரின் மூலகாரணி- நாகினி


அவனியில் நொடிகள் கடத்திநிதம்
கவனமும் சிதறி விழுந்திடுவோர்
உவப்பென ஒளிரும் நலத்தினாக்கம்
தவறியே கலங்கி உழல்கின்றார்!

துயரிலும் நகைப்பு மருந்துடனே
தயக்கமும் தவிர்த்த மனதாலே
பயன்மிகு முயற்சி வழியொன்றை
இயக்கமாய் கையில் பதிக்காதோர்!

வருத்தமும் முகத்தில் படருமந்த
தருணமே கவலை திசைமாற்றி
கருத்தென கடமை செயல்காட்டி
விருந்தெனும் மகிழ்வின் வழிகாணோர்!

இசையினும் உயர்ந்த மருந்தொன்று
தசைகளின் உயிராம் மழலையின்
அசைவினில் உரமாய் இருப்பதையும்
வசையிலா மனதில் நினைக்காதோர்!

தரணியில் கடுகு துயரினையும்
இரவிலும் விடியும் பொழுதிலும்
வரமென புலம்பும் திறத்தாலே
நரகமே தனதாய் உழல்கின்றார்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.