புதியவை

அதுருகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அதுருகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு



அதுருகிரிய – லக்‌ஷபான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவர் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள், நேர் எதிரே வந்த லொறியொன்றுடன் மோதி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதுக்கை – வடருக்க பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ் மற்றும் லொறி ஆகியவற்றின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கல்னெவ – கலா ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்று மற்றுமொரு விபத்திலும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் மோதியதில் நேற்று (12) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
புல்னெவ பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய 21 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.