புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சரவதேச அமைப்பு ஆகஸ்ட் மாதம் சர்வதேச மட்டத்தில்- நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றகவிதை ,விஜயகுமார் வேல்முருகன் (கவிச்சுடருக்குப் பதிலாக - கவின்கலை) பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்குடியும் இழப்பும்

மதுவுண்ட போதையில்
மானங்கெட்டு இருப்பதுவும் ஏனடா
மங்கையரும் தங்கையரே
மூர்க்கப் பார்வையும் ஏனடா

கடனை வாங்கி குடி குடித்துக்
கழுத்து நெருங்கி வதைபடுவதேனடா
கண்ணீரிலே குடும்பத்தைக்
கலங்கடிப்பதும் ஏனடா

வளர்ந்த பிள்ளை மனம் நோகும்படி
வசை பாடுவதும் ஏனடா
வாய்த்த மனைவி கலங்கும்படி
வார்த்தை ஊசிகளும் ஏனடா

மங்களமான மனைவியோட
தங்க தாலிக்கூட அடகினிலே இருக்குதடா
பாடசாலை போகும் பிள்ளையும்
தொழிற்சாலையிலே உழைக்குதடா

மணவயது வந்த மகளும்கூட
மனம் கலங்கி இங்கு தவிக்குதடா
மணவயது கடந்துமின்றும்
முதிர்கன்னியாக நிற்குதடா

பிஞ்சு மனமும் வதங்கிடுமே-உன்
நஞ்சு வார்த்தை கேட்டாலே
கொஞ்சும் மொழியும் மறந்திடுமே
நஞ்சு மதுவை உண்டாலே

மானங்கெட்ட மானிடனே
மதுவால் என்ன சுகம் கண்டாயோ
எல்லா நலமும் இழந்துவிட்டு
எச்சிலாய்த் தெருவினில் நிற்பாயோ!


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.