புதியவை

பனாகொட சிறுவன் கொலை: சந்தேகநபர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

பனாகொட – கபுருகொட பகுதியில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுவனின் பிறந்த நாள் நேற்றாகும் (25). பெற்றோர்கள் வெளியே சென்றதை அடுத்து சிறுவன் வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் மோப்ப நாய்களின் ஊடாக சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கைகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டன.
இந்த மோப்ப நாய்கள் நின்ற இடத்திலிருந்து முச்சக்கரவண்டி மூலம் சந்தேகநபர் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தந்தைக்குச் சொந்தமான கல் குவாரியொன்றில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் பல வருடங்களாக தங்கியிருந்த வீடொன்றில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தங்கியிருந்த நபர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.