புதியவை

மது-செல்வன்
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் 75% பேர் மது அருந்தும் வழக்கம் உடையவர்கள். இவர்களில் பத்தில் ஒருவர் மதுபோதைக்கு அடிமையாகி ஆல்கஹாலிக் ஆகிறார். தமிழ்நாட்டில் இது குறித்த புள்ளிவிவரங்களை தேடியதில் குத்துமதிப்பாக 40% தமிழர்கள் மது அருந்தும் வழக்கம் உடையவர்கள் எனவும் மொத்த தமிழரில் 5% பேர் ஆல்கஹாலிக் எனவும் தெரியவந்தது.

ஆல்கஹாலிசம் என்றால் என்ன என நிர்ணயிப்பது சிரமம் எனினும்:

தனியாக மது அருந்துதல்
மது அருந்துகையில் பேசியது நினைவில் இல்லாதிருத்தல்
குறிப்பீட நேரத்தில் மது அருந்த முடியவில்லையெனில் உடல் நடுக்கம், எரிச்சல், கோபமடைதல்
மதுவை ஒளித்து வைத்து குடித்தல் (கார், வீடு, அலுவலகம்)
மது அருந்துகையில் சிப்பிகுடிக்காமல் பாட்டிலோடு கவிழ்த்தல்
நார்மலாக செயல்படவேண்டும் என்பதற்கே குடித்தாகவேண்டும் என்ற சூழல்
மதுவால் வீட்டில் அலுவலகத்தில், உறவுகளில் பிரசனை ஏற்படுதல்
குடிக்க முடியவில்லையெனில் வாந்தி, வியர்த்து கொட்டுதல், உடல் நடுக்கம் ஏற்படுதல்

இவை எல்லாமே ஆல்கஹாலிசத்தின் அறிகுறிகள். எத்தனைகெத்தனை இவை அதிகரிக்கிறதோ அத்தனைகத்தனை நீங்கள் ஆல்கஹாலிக் என பொருள். மற்றபடி வாரம் ஒரு ட்ரின்க் என்பது போல அடிப்பவர்களை இக்கட்டுரை குறிப்பிடவில்லை

மதுவின் தீய விளைவுகள்

ஆண்களை விட பெண்களே மதுவால் அதிகம் பாதிப்படைகிறார்கள். காரணம் ஆண்களை விட அவர்கள் உடலில் குறைவான அளவு நீர் இருப்பதால் அவர்கள் ரத்தத்தில் அதிக அளவில் மது கான்சன்ட்ரேட் லிவர் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கே மதுவால் அதிகம் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஓஸ்டிரிஒயோபொசிஸ் எனப்படும் எலும்புதேய்மானம் ஆண்களை விட அதிகமாக மதுவால் ஏற்படுகிறது

ஆண்களை விட பெண்களுக்கு டிப்ரஷன், மனவியாதிகள், உண்பதில் சிக்கல்கள் ஆகியவை மதுவால் உண்டாகிறது. இவை ஒருதரம் வந்தால் அதன்பின் மதுவை நிறுத்தினாலும் இவை குணமாகாது. இதற்கு தனியாக சிகிச்சை எடுக்கவேண்டும்.

சிலர் ஆண்டுக்கணக்கில் மது அருந்தினாலும் ஆல்கஹாலிக் ஆவதில்லை. சிலர் ஆண்டுக்கணக்கில் மது அருந்தி கொஞ்சம், கொஞ்சமாக அதன் அளவை அதிகரித்து ஒருகட்டத்தில் தனக்கே தெரியாமல் ஆல்கஹாலிக் ஆகிவிடுவார்கள். மது அருந்த முக்கிய காரணியாக குடும்ப சூழல் சுட்டிகாட்டபடுகிறது. தந்தை, தாய், ஆல்ககாலிக் என்பதை பார்த்து வளரும் பிள்ளைகளும் குடிப்பதில் தவறில்லை என்ற மனபான்மையில் வளர்ந்து குடிக்க துவங்கிவிடுகிறார்கள். தவிரவும் ஆல்கஹாலிக்குகளின் பிள்ளைகள் போதைமருந்துகளை உபயோகிக்கும் வாய்ப்பும் , ஆல்ககாலிக் அல்லதவர்களின் பிள்லைகளை விட 400 மடங்கு அதிகம்

குடியும் ஈரலும்

நம் ஆல்ககால் முழுவதையும் ஈரலே ப்ராசஸ் செய்கிறது. ஒரு மணிநேரத்துக்கு 15 மிலி ஆல்கஹாலை மட்டுமே அதனால் ப்ராசஸ் செய்ய இயலும். அதனால் மொடாகுடியாக ஆல்கஹால் உள்லே போனால் அந்த ப்ராசஸ் நடைபெறும் வரை ஈரல் வேறு எந்த வேலையையும் செய்யாது. உடலின் புரதம், கொழுப்பு, வைட்டமின்களை கிரகிக்கும் வேலை முற்றிலும் நிறுத்தி வைக்கபடும். மதுவை ஈரல் ப்ராசஸ் செய்கையில் வைட்டமின்கள் அனைத்தும் கிரகிக்கபடாமல் சிறுநீரில் வெளியேற்ரபட்டுவிடும். உடலின் ஸின்க் அளவுகள் குறையும். ஸின்க் தட்டுபாடு நோயெதிர்ப்பு சக்திக்கும், கர்ப்பம், பசியெடுக்காமை போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்மை குறைபாடும் ஏற்படும்.

ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு ஸின்க் பற்றாகுறை வரும் என்பதால் அவர்கல் மது அருந்தாத சமயம் பாதாம், முட்டை, இறைச்சி போன்றவற்றை எடுத்து ஸின்க் பற்றாகுறையில் இருந்து காப்பாற்றிகொள்ளவேண்டும்.

ஃபேட்டி லிவர் எனும் ஈரலில் கொழுப்பு தேங்கும் வியாதி உருவாக முக்கிய காரணம் மதுவே. இதன் முற்றிய நிலை சிர்ரோசிஸ் எனப்படும் முற்றிய ஈரல் பாதிப்பு. ஐந்தில் ஒரு ஆல்கஹாலிக் சிர்ரோசிஸால் பாதிக்கபடுகிறார். சிர்ரொசிஸ் வந்தால் பெரிதும் மரணமே சம்பவிக்கும். மருத்துவத்தால் காப்பாற்றபடகூடிய வாய்ப்புகள் வெகுகுறைவே.

உடல் உறுப்புக்களில் அதீதமாக சுமைகளை சுமக்ககூடிய உறுப்பு ஈரலே ஆகும். ஈரல் தான் உணவில் உள்ள விஷமனைத்தையும் அகற்றி நம்மை சுத்தபடுத்துகிறது. வெட்டினால் வளரகூடிய உறுப்பும் ஈரலே. சுமார் 25% ஈரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றினாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் எத்தனையோ விஷத்தை கையாளகூடிய ஈரலால் கையாளமுடியாத ஒரே விஷம் மதுவே ஆகும். மதுவால் பாதிப்படையும் ஈரலை வெட்டி எடுத்தாலும் அது மீண்டும் வளராது

மதுவும் இதயநலனும்

மது இதயத்தை பலமுனைகளில் தாக்குகிறது. மதுவால் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் இதயத்துக்கு கூடுதல் சுமையை ஏற்றுகிறது. இதய சுவர்களையும் ஆல்கஹால் பாதிப்படைய வைக்கிறது. இதை கார்டியோமயோபதி என அழைப்பார்கள். மதுவால் இதயத்தின் அளவு விரிந்து பெரியதாகும். ஆல்கஹால்லிக்குகளின் இதயம் வீங்கி, பெருத்து காணபடும். காரணம் ரத்தநாளங்களை மது பெரிதாக்குவதே. அதனால் மதுவால் உங்கள் லிவர் தப்பினாலும் இதயம் தப்பும் வாய்ப்பு குறைவே

மதுவும் சர்க்கரை வியாதியும்

மது ஈரலில் இருந்து க்ளுகோஸ் ரிலீஸ் ஆவதை தடுக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு லோசுகர் ஏற்படுகிறது. டயபடிஸ் இருந்து இன்சுலின் ஊசி எடுப்பவர்களுக்கு இதன் ரிஸ்க் மிக அதிகம்.

மதுப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

ஆல்கஹாலிக் ஆக இருந்தால் சொட்டு மதுவையும் தொடாமல் நிறுத்துவதே உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும். அளவை குறைத்து அடிப்பது, பார்ட்டியில் மட்டும் குடிப்பது என்பது கூட அதன்பின் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் இப்படி ஆரம்பித்து அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு போய்விடுவீர்கள். ஆயுளுக்கும் சொட்டு மதுவையும் தொடமாட்டேன் எனும் விரதமே உங்களை காப்பாற்றும்

மதுவை ஒரே வாரம் நிறுத்தினால் அதன்பின் ஆயுளுக்கும் தொடமாட்டீர்கள். ஆனால் அந்த ஒரு வாரமும் தூக்கம் வராது, உருவெளிதோற்றம் என சொல்லுவது போன்ற மாயபிம்பங்கள் கண்முன் நிழலாடும். மயக்கம் வரும். இதயதுடிப்பு அதிகரிக்கும். காய்ச்சல், அதீத வியர்வை ஆகியவை வரும். ஒரு வாரம் மருத்துவமனையில் சேரமுடிந்து குடும்பம், மருத்துவர் கண்காணிப்பில் இருந்தால் ஆயுளுக்கும் மதுவில் இருந்து நீங்கள் விடுதலை அடைந்துவிடுவீர்கள். ஆனால் உங்களை கண்காணிப்பவர்கள் உங்கள் எரிச்சல், கோபம், வன்முறை போன்றவற்றை கையாள தெரிந்தவரக்ளாக இருக்கவேண்டும்.

மது அருந்துபவர்களை திட்டுவது, கண்டிப்பதை தொடர்ந்து செய்துவந்தால் அது அவர்களை அப்பழகத்துக்குள் மேலும் தள்ளவே செய்யும். போதுமான அளவில் தெரபி, கவின்சலிங் போன்றவற்றை கொடுக்கவேன்டும்.

சில சமயம் மது அருந்துவதை தடுக்க மாத்திரைகளும் பயன்படும். இந்த மாத்திரையை போட்டுகொண்டு மது அருந்தினால் வாந்தி வரும் என்பதால் இதை போட்டுகொன்டு குடிக்க முடியாது.

எந்த, எந்த சமயம் குடிக்கிறீர்கள் என்பதை கவனிக்கவும். உதாரணமாக சில நண்பர்களுடன் வழக்கமாக குடித்தால் அவரக்ளுடன் பழகுவதை நிறுத்தவும். மாலையில் 6 மணிக்கு டிவி பார்த்தபடி குடிப்பது வழக்கம் எனில் அந்த சமயம் டிவி பார்க்காமல் வாக்கிங் போகவும்.

மதுவை நிறுத்திய சமயம் உபவாசம் இருப்பது மிக உதவும். எதையும் உண்ணாமல் 24 மணிநேர உபவாசம் இருந்தால் ஈரல் சுத்தமாவதுடன் கிரேவிங்கும் குறையும்

அதனால் மதுவை நிறுத்துவதெனில்

குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லி குடும்பத்துடன் நன்கு தெரிந்த ஒரு மருத்துவமனை ஒன்றில் ஒரு வாரம் அட்மிட் ஆகிவிடுங்கள்.

இந்த ஒரு வாரமும் மருத்துவகண்காணிப்பில் இருங்கள். ஆரோக்கியமாக உண்ணுங்கள். சொட்டு மதுவையும் அருந்தவேண்டாம். கடும் பின்விளைவுகள் இந்த ஒருவாரமும் வரும். ஆனால் ஒருவாரம் தாக்குபிடித்தால் அதன்பின் சுத்தமாக மதுவை மறந்துவிடுவீர்கள். அதன்பின் நண்பர்கள், பொழுதுபோக்கு எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு புதியதாக ஒரு வாழ்க்கையை தொடங்குங்கள்.

மதுவை நிச்சயம் வெல்லமுடியும், மனமிருந்தால்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.