புதியவை

பொங்கியெழு பெண்ணே - லூசியா கூஞ்ஞே


பவனி வருகின்றது பாவையர் வாழ்விலே
பத்துப்பேர் பலாத்காரம் பத்து வயதினிலே
பாதகர்களுக்குத் துணை தம்பதியராமே
பத்திரிகைச் செய்தி இன்றுதுவாமே ( இந்தியா)


இதுபோல் எத்தனையோ ஏனிந்தக் கொடுமையோ
தாயாய் தாரமாய் உடன்பிறப்பாய் பெண்தானே
கருவினிலே சுமப்பவளை உருக்குலைக்கும் கயவர்
கூட்டத்தினில் துணைபோகும் பெண்களுமுண்டு


தினசரி நிகழ்வாய் பெண்கள் சீரழியும் கொடுமை
தடைபோட முடியாத அவலமான நிலமை
ஆணும் பெண்ணும் அச்சாணியாகும் வாழ்க்கை
ஆண்டவன் படைப்பில் ஏனிந்த வேற்றுமை


இயற்கையின் சதியில் பாழாவது பெண்மையா
இயலாமையினால் என்றும் மிதிபடுவதா
கனம் அழுத்தி வைரமாகும் கரித்துண்டு
பலம்பெற்று பதிலடி கொடு பெண்ணே.!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.